Compassion towards the satisfaction of hunger is the only key that makes us to attain the prosperous ecstasy life. This is one of the most important objective of Sanmargam of Thiru Arutprakasa Vallal perumaanar. Towards accomplishing this objective, the removal of the cruelty of hunger through Compassion in this World is the lifetime goal for the great founder of Karunai Neri Valar Foundation, Dhayavu Prabhavathi Ammayar. Dhayavu Prabhavathi Ammayar has commenced the “Pasi illa Paar Scheme” (The Hungerless world) towards achieving this great objective. In 2017, Karunai Neri Valar Foundation cooked nutritious food and distributed to the poor people across the street. The distribution of Nutritious porridge to the hard-working Poor people in Public places is also undertaken by this Foundation. The food for the old aged people is also distributed directly to their respective houses. During the Corona Pandemic, the identification of the old aged people abandoned by their children, the Women and the Children abandoned by the Family Men, Physically challenged people and also to the people living below the Poverty Line has been taken up and the provision of daily groceries to them is started. Currently, the groceries of worth Rs. 1000 on a monthly basis is being provided to 110 poor families in 8 districts of Tamizhagam. This monthly baggage of groceries consists of Rice, Wheat, Semolina, Semiya, cooking oil, Chilly powder, Tamarind, Cumin seeds, Pepper, Garlic and similarly some of the basic groceries, that are being distributed. The basic items such as Bathing soaps, Coconut Oil etc are also being provided. This Scheme is implemented for the elimination of the difficulties of old aged people living in solitude and abandoned by their children and to provide the helping hand for their basic standard of living. The main objective of this Scheme is to make “The Hungerless World”. According to Thiru Arutprakasa Vallal perumaanar, the compassionate souls that realizes the cruelty of the hunger and come forward towards elimination of it will accomplish Everlasting Freedom from the cycle and Births and Deaths and lives with enormous pleasures of Siddhis. No dangers never occur of whatever kind due to the negligence and Karma for those who eliminate the Hunger of poor people with Compassion. The dreadful effects of Hunger is the most cruel of all difficulties. A person can bear any difficulty through the Will Power. But nobody can withstand the terrible Hunger. The generous and compassionate people are honourably welcomed to participate in this benevolence act and to extend your valuable service through Pitying hand and to eradicate the Hunger as much as possible by donating Rs 1000 per month for a family and to achieve Eternal blissful life. Please contact 9940270183 through WhatsApp to engage in this Proposition. Please contact us at www.knvf.org and “Dhayavu Prabhavathi Amma” Youtube Channel for further details.
திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் முக்கிய சன்மார்க்க கொள்கைகளில் ஒன்றான, பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யம் என்கின்ற திறவுகோலே நமக்கு பேரின்பப் பெருவாழ்வில் அடைவித்திடும் நெறி. இந்த வாக்கியத்தைத் தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு தயவுடன் இந்த உலகத்தில் பசிக்கொடுமை நீங்க கருணை நெறி வளர் சபையின் நிறுவனர் தயவு பிரபாவதி அம்மா அவர்களால் பசியில்லாப் பார் என்னும் திட்டம் துவங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், சாலையோரத்தில் இருக்கும் ஏழைகளுக்கு உணவு சமைத்து எடுத்துச் சென்று விநியோகம் செய்து வரப்பட்டது. பொது இடங்களில் உழைக்கும் மக்களுக்குக் கஞ்சி வார்த்தல் செய்யப்பட்டு வந்தது. இயலாத முதியவர்களுக்கு இல்லத்திற்கே சென்று உணவு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கும், கணவரால் கைவிடப்பட்ட தனித்து வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்றும் இது போன்ற மிகவும் வறுமை நிலையில் உள்ள ஏழைகளைத் தேர்ந்தெடுத்து மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்பொழுது தமிழகத்தில் 8 மாவட்டங்களில், 110 குடும்பங்களுக்கு மாதத்திற்கு தலா 1000 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த தொகுப்பில், அரிசி, கோதுமை, இரவை, சேமியா, சமையல் எண்ணை, மிளகாய்த்தூள், புளி, சீரகம், மிளகு, பூண்டு மற்றும் இது போன்ற அடிப்படைத் தேவையான பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. குளியல் வழலைக் கட்டிகள், தேங்காய் எண்ணெய் போன்ற ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. பிள்ளைகளால் கைவிடப்பட்ட தனித்து வாழக்கூடிய முதியவர்களின் துயர் நீக்கி, ஆதரவுக் கரம் நீட்டும் வகையிலே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பசியில்லாப் பாரை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் வாக்குப்படி பசிப்பிணி அறிந்து பசி தவிர்த்தலை செய்யக்கூடிய ஆன்மாக்களே நித்திய முத்தர்களாய் அளவிறந்த சித்தி இன்பங்களுடன் வாழ்வார்கள். பசியை நீக்குகின்ற தயவுடையவர்களுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வரவே வராது. பசித்துன்பமே அனைத்துத் துன்பங்களிலும் கொடிய துன்பம். மற்ற துன்பங்களை மன உறுதியால் தாங்கிக் கொள்ளும் வல்லமை ஒருவரிடத்தில் உண்டு. ஆனால் பசிக்கொடுமையை எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட இந்த அறப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஆதரவற்றவர்களுக்குக் தயவுக் கரம் நீட்டி பசித்துன்பத்தை தங்களால் இயன்ற அளவு தீர்த்திட ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கி பேரின்ப வாழ்வை அடையலாம். இத்திட்டத்தில் இணைந்து கொள்ள 9940270183 என்ற எண்ணிற்கு வாட்ச்அப் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு www.knvf.org என்ற இணையதள முகவரியிலும், Dhayavu Prabhavathi Amma என்ற Youtube சேனலிலும் தொடர்பு கொள்ளுங்கள்.